Small Streams of Caring become a River of Love...
கண்ணீரில் தினம் நனைந்து
கரைகின்ற இரவு.
கனவுகளைத் தொலைத்துவிட்டு
வாழ்கின்ற மனது.
கானல் நீராய் தொலைவில்
தெரிகின்ற உறவு.
கைப்பிடிக்க முடியாமல்
தவிக்கின்ற வாழ்வு.
இழப்புகளில் முகம் புதைத்து
எரிகின்ற நினைவு.
பொய்யான வார்த்தைகளில்
ஆன்மாவின் இறப்பு.
0 comments:
Post a Comment