***

 எரிமலைக் குழம்பின்

இரத்தினக் கற்களாய் 

உச்சத்தில் பிறக்கும்

உபநிடத சொற்கள் ..

***

 காற்றுக்குதான் எத்தனை கருணை...

மென்மையாய் சுழற்றி

தரை இறக்குகிறது

மரம் நீங்கும்

மலரை சருகை...


காற்றில் மிதந்து

இறங்கிக் கொண்டிருந்த

பழுப்பு வண்ண இலை

சிறகு முளைத்து பறந்தது

பட்டாம்பூச்சியாய்...

***

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஜன்னலில்...

நிலைத்திருக்கும் விளக்குகள்  எல்லாம்பின்னோக்கிச் செல்ல

ஓடும் விளக்குகள் எட்டிப் பிடிக்க முயல

விரைந்துகொண்டிருக்கிறது காலம்...

வெறும் சொல்.

பச்சைநிறம் என்பது

நிறமில்லை 

எனக்கு...

***

 அமருவதற்கான பூவை

சுமந்து கொண்டு பறப்பதில்லை

பட்டாம்பூச்சி...

சுதந்திர தினம்

பட்டொளி வீசிப் பறக்கின்றன

சிறைக்கைதிகள் நெய்த

மூவர்ணக் கொடிகள்...

மார்கழி விடியல்

மார்கழிமாத மரங்களும்

அமைக்கின்றன

பூக்கோலங்களை...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..