காணாமல் போதல்

மறையும் சூரியனாய்
உதிரும் மலராய்
காணாமல் போகவேண்டும்
நானும் இயல்பாய்...

சிறார்கள்

எல்லா வீடுகளிலும்
வளர்க்கப்படுகின்றன
போன்சாய் மரங்கள்.

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..