சந்திப்பு-3

நீ வரும் செய்தி கேட்டு
தீச்சுடர் அணைத்த விட்டிலாய்
திடுக்கிட்டுத் துடிக்கும் நினைவு.
ஒன்றுமே நேராதது போன்று 
காட்டும் உன் முகத்தை 
நானும் அணிய முயன்று 
தோல்வியுறுகிறேன்.
வெறுமையாய் நீண்ட இடைவெளிகளுடன் 
இம்முறையும் கடந்து போகும்.
ஆயாசத்துடன் காத்திருக்கிறேன் 
ஆயத்தங்களோடு...

நான்

கடவுள் படத்தின்
கண்ணாடி சட்டத்தில்
பிரதிபலிக்கும் என் பிம்பம்.  

முன்னோர்கள்

தலை தொட்டு
ஆசிர்வதிக்கும்
மரங்கள்.

மழை

கரைகிறது
கம்பிகளின் மேல் நிற்கும்
மேகக் கூரை.

மழை


காத்திருக்கிறேன்
மழைநிற்க வேண்டுவது
நியாயமில்லை.

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..