தீயாய்...

தீயாய் என்னுள்ளே
நீநின்று வளர
காடாய் நிறைந்திருக்கும்
தானழிந்து மறையும்.

இலையுதிர் காலம்...

ஒவ்வொரு காற்றிலும் 
உதிர்வதற்க்கென்றே 
முதிர்ந்துகொண்டே இருக்கின்றன 
மரத்தின் இலைகள்.

நாணயம்

உறுத்திக்கொண்டே  இருக்கிறது 
டிராஃபிக் சிக்னலில் 
கை தொட்டுக் கேட்கும் 
அந்த வயதான பாட்டிக்கு 
கொடுக்க எடுத்து 
முடியாமல் போய் 
பையிலேயே தங்கிவிட்ட 
ஒற்றை நாணயம்.

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..