நகம்.. ..

உதிர்ந்த ரோஜா இதழ்கள்
உன் விரல்களின்
நுனிகளில்...
உன் நகங்கள்....

என் மனம்...

முல்லைநிலம் என்பது
வனமும் வனம்சார்ந்த இடமுமாம்...
என்மனம் என்பதோ
நீயும் நீசார்ந்த நினைவுகளும்...

சாலையோர கோவில்

சாலையோர கோவில்களின்
சாமிகளும்
பதட்டத்துடன் தான் இருக்கிறார்கள்
தங்கள் இருப்பிடம் எப்போது
இடிக்கப்படுமோ என்று.

விடுதலை

சிறைக்கைதிகள் உருவாக்கும் 
தேசியக் கொடிகள் 
சுதந்திர தினத்திற்காய்...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..