சரிதானே?

 தண்ணீரில் மூழ்கியது

எனது கல்லறை.

வெளியேறி 

உயரமான

ஒன்றினுள்

படுத்துக்கொண்டேன்.

உறவுகள்

ஒதுங்கிய ரயில்நிலையத்தின்

ஒற்றை விளக்கு

ஒளியூட்டும் பெஞ்சில்

இருவர்

தனித்தனி செல்போனுடன்.

கோடுகள்

 வீடு சுமந்து திரியும்

நத்தைக்கு கூட

புறப்பட்ட இடம் தேட

கோடுகள் உண்டு.

இறை

பறிக்கப்படும் 

பூக்களெல்லாம்

நிர்மால்யம் தான்.

புழுக்கம்

 நீ வந்து சென்றாய்

கோடைப் பகலின்

ஓர் மழையாய்...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..