மணல்வெளி யாவும்
இருவரின் பாதம்
நடந்தததை காற்று
மறக்காமல் இன்றும்
துள்ளி வந்து என்னிடம்
சொல்லமுயலும்போது
தள்ளி முகம்திருப்பி கண்ணீரை
உள்ளிழுத்து சிரிக்கிறேன் நான்.
வார்த்தைகள்.
காதலில் என்றோ
நீ உதிர்த்த வார்த்தைகளை
இன்றும் சுமந்துகொண்டு
திரிகிறது காற்று.
ஒரு சாரலாய் தூறலாய்
எனைச் சேரும் கணங்களில்
எனைச் சேரும் கணங்களில்
சிலிர்த்து உயிர்க்கிறேன்
நான்.
நிழல்...
இளைப்பாறி முடித்து பின்...
விலகிச் செல்லும்போது
கூடவே நிழலையும்இலையுதிர்காலம்
வந்துவிடக் கூடுமென்று
விலகிச் செல்லும்போது
எடுத்துச் சென்றுவிட்டாய்.
இலைகள் அடர்ந்திருந்தும்
நிழல் தரமுடியாமல்இளைப்பாற யாருமற்று
தனித்திருக்கிறேன்...
Subscribe to:
Comments (Atom)
***
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
-
நடைபாதையில் இறந்து கிடக்கும் சகமனிதனை சலனமின்றிக் கடக்கிறேன்... தொலைவினில் காக்கை கூச்சல்...
-
கான்கிரீட் தரையில் உதிர்கின்றன அந்தப் பெயர் தெரியாத மரத்தின் விதைகள்...
-
எப்போது நிகழ்ந்ததென்று தெரியவில்லை. பத்திரமாய் தான் வைத்திருந்தேன் நீ விலகிவிட்ட பின்பும் கூட. தொடர்ந்த உன் புறக்கணிப்பால் அது தளர்ந்து வந்த...