நீ வரும் செய்தி கேட்டு
தீச்சுடர் அணைத்த விட்டிலாய்
திடுக்கிட்டுத் துடிக்கும் நினைவு.
ஒன்றுமே நேராதது போன்று
காட்டும் உன் முகத்தை
நானும் அணிய முயன்று
தோல்வியுறுகிறேன்.
வெறுமையாய் நீண்ட இடைவெளிகளுடன்
இம்முறையும் கடந்து போகும்.
ஆயாசத்துடன் காத்திருக்கிறேன்
ஆயத்தங்களோடு...
No comments:
Post a Comment